தமிழக செய்திகள்

கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், மங்கள் அஸ்ரா ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஆலந்தூர்,

நங்கநல்லூரில் கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.

கட்டுமான பணி

சென்னை நங்கநல்லூர் இந்து காலனி 2-வது பிரதான சாலையில் 1,500 சதுர அடி நிலத்தில் 2 அடுக்குமாடி வீடு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. முதல் மாடியில் சென்ட்ரிங் வேலை நடைபெற்று வந்தது.

கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த மங்கள் அஸ்ரா (வயது 26), பழவந்தாங்கல் பி.வி. நகரைச் சேர்ந்த ராமு (54), பழவந்தாங்கல் நேரு காலனியைச் சேர்ந்த குணா (48) ஆகிய 3 பேரும் சென்ட்ரிங் பணிக்காக இரும்பு கம்பிகளை சுமந்தபடி மாடிக்குச் சென்றனர்.

மின்சாரம் தாக்கி சாவு

அப்போது அவர்கள் சுமந்து சென்ற இரும்பு கம்பிகள் அருகில் சென்ற உயர் மின்னழுத்த கம் பியில் உரசியது. இதில் 3 பேரையும் மின்சாரம் தாக்கியது. அவர்கள் அலறியபடி இரும்பு கம்பி களுடன் படிக்கட்டில் மயங்கி விழுந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், 3 பேரையும் நங்கநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக தாம்பரம் அரசு பொது ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், மங்கள் அஸ்ரா ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சிகிச்சை

மின்சாரம் தாக்கியதில் கை, கால், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் தீக்காயம் அடைந்த ராமு, குணா ஆகிய இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT