தமிழக செய்திகள்

7-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

சென்னை கிண்டியில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் கட்டப்பட்டு வரும் 13 மாடி கட்டிடப் பணியில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.

சென்னை,

சென்னை கிண்டி பகுதியில் 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.

கிரேன் ஆபரேட்டர்

சென்னை கிண்டி அண்ணா சாலையில், தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் 13 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கிரேன் ஆபரேட்டராக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திலோசன் (வயது 36) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

நேற்று முன்தினம் இரவு, திலோசன் மதுபோதையில் அந்த கட்டிடத்தின் 7-வது மாடியில் படுத்து தூங்கினார். நேற்று அதிகாலையில் எதிர்பாராதவிதமாக அவர் 7-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயம் அடைந்த திலோசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT