தமிழக செய்திகள்

கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.

தொட்டியம் அருகே உள்ள தோளூர்பட்டி கிழக்குதெருவை சேர்ந்தவர் பிச்சை. இவரது மகன் திருமுருகன் (வயது 23). சென்ட்ரிங் தொழிலாளி. நேற்று திருமுருகன் தொட்டியம் அருகே அரசலூர் திருமண மண்டபம் எதிரில் கந்தசாமி என்பவர் புதிதாக கட்டிவரும் வீட்டில் சென்ட்ரிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் மேல் இருந்து தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட திருமுருகனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருமுருகனின் தந்தை பிச்சை கொடுத்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT