தமிழக செய்திகள்

தனியார் தொழிற்சாலையில் இரும்பு தகடுகள் விழுந்து தொழிலாளி சாவு

தனியார் தொழிற்சாலையில் இரும்பு தகடுகள் விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தை சேர்ந்தவர் செங்கல்வராயன் (வயது 60). இவர் கவரைப்பேட்டை அருகே குருதானமேடு கிராமத்தில் உள்ள வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்திடும் தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு அவர் தொழிற்சாலையில் வேலை செய்துக்கொண்டிருந்தார்.

செங்கல்வராயன் மீது சுமார் 15 அடி உயரத்தில் இருந்து இரும்பு தகடுகள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT