தமிழக செய்திகள்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதியில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு, தொழிலாளி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி,

வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தொடர்புடைய தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் தேங்காய் பண்டகசாலைப் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (வயது 29), தொழிலாளி. இவர் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி அதிகாலை, அப்பகுதியில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த 41 வயது பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

3 ஆண்டுகள் சிறை தண்டனை

இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, குற்றவாளி ராம்குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மேலும் அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மினிலா ஆஜராகி வாதிட்டார்.

SCROLL FOR NEXT