தமிழக செய்திகள்

தேவூர் அருகேமது குடிப்பதில் தகராறு; தொழிலாளிக்கு கத்திக்குத்து

தேவூர் அருகே மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளிக்கு கத்திக்குத்து விழுந்தது.

தேவூர்

 சேலம் மாவட்டம் தேவூர் அருகே அரசிராமணி முத்தாயிகாடு பகுதியை சேர்ந்த பூபாலன் மகன் மாதேஸ் (வயது 35). தொழிலாளியான இவரும், அவருடைய நண்பர் சேட்டும் (40) அரசிராமணி மூலப்பாதையில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துள்ளனர். மது வாங்கும் போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது சேட்டு வைத்திருந்த கத்தியால், மாதேஸ் கழுத்து, முகம் உள்ளிட்ட பகுதிகளில் குத்தியதாக கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மாதேசை மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தேவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

SCROLL FOR NEXT