தமிழக செய்திகள்

தொழிலாளி தற்கொலை

தேவதானப்பட்டி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 25). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது சரவணக்குமார் தூக்குப்பாட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

SCROLL FOR NEXT