தமிழக செய்திகள்

அரச-வேப்ப மரத்திற்கு திருமணம் செய்து வைத்த தொழிலாளர்கள்

அரச-வேப்ப மரத்திற்கு தொழிலாளர்கள்திருமணம் செய்து வைத்தனர்.

மணப்பாறை, ஜூன்.4-

மணப்பாறை பஸ் நிலையம் அருகே தட்டுரிக்ஷா மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் அமரும் இடத்தின் அருகே ஒரு அரச மரம் மற்றும் வேப்பமரத்தை நட்டு வைத்து பராமரித்து வளர்த்து வந்தனர். தற்போது 2 மரங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து வளர்ந்து பூக்கும் நிலை ஏற்பட்டதை அடுத்து அவை இரண்டிற்கும் திருமணம் செய்து வைக்க தொழிலாளர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று யாகபூஜைகள் நடத்தி 2 மரங்களுக்கும் திருமணம் செய்து வைத்தனர். இதில் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT