தமிழக செய்திகள்

உலக சுற்றுச்சூழல் நாள்: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து

நெகிழிப்பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாத்திட உறுதியேற்போம் என முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் இன்று எடுக்கும் முடிவுகள்தான் நம் நாளைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதை இந்நாள் நமக்கு நினைவூட்டுகிறது.

பசுமையான உலகம்

இந்நாளில், மரக்கன்றுகளை நட்டு, நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நெகிழிப்பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாத்திட உறுதியேற்போம். நமது சிறிய முயற்சிகளே நாளைய தலைமுறைக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் பசுமையான உலகை உருவாக்கும். இயற்கையைக் காப்போம்; நம் எதிர்காலத்தை வளமாக்குவோம்!

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT