சென்னை,
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
தியாகராய நகர் கிரியப்பா சாலையில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, புகையிலை பயன்பாட்டை தவிர்த்து, அதன் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் மாநகர நல அலுவலர் ஜெகதீசன், பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணராஜ், மாவட்ட மனநல மருத்துவர் லட்சுமி, கூடுதல் நகர் நல அலுவலர் சுகன்யாதேவி, மண்டல நல அலுவலர் ஆஷாலதா, மண்டல அலுவலர் பானுகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை அதிகரித்து, புகையிலை இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.