கிருஷ்ணகிரி,
தமிழக முதல்-அமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய்யின் பிறந்த நாள் கடந்த 22-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் உள்ள விநாயகர், முருகன் கோவில், காந்திநகர் விநாயகர் கோவில்களில் மூலஸ்தானத்தில் விஜய் படத்தை வைத்து பூஜை செய்வது போலவும், அதை பக்தர்கள் வழிபடுவது போன்ற புகைப் படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. இதனால் பரபரப்பு ஏற்பட் டது. இதை அ.தி.மு.க.வினர் சமூக வலைத்தள பக்கங்களில் போட்டு, முதல்-அமைச்சரும், முழுமுதற் கடவுளான விநாயகரும் ஒன்றா?. இரண் டையும் வைத்து பூஜையா? என கேட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் கூறும் போது, 'முழுமுதல் கடவுளின் மூலஸ்தானத்தில், தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் படத்தை வைத்து, பூஜை செய்வது போல் படம் எடுத்து ரீல்ஸ் போடுகின்றனர். அவரை கடவுளுக்கு இணையாக வைத்து பூஜை செய்ததற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்' என்றார்.
இது குறித்து கோவில் அர்ச்சகர்கள் கூறும் போது. 'முதல்-அமைச்சர் படத்தை சாமி பாதத்தில் வைத்து தரும்படி த.வெ.க. கட்சியினர் கேட்ட னர். அதை, தங்கள் அலுவலகம், வீடுகளில் மாட்ட இருப்பதாக கூறினர். திருமண பத்திரிகைகள், வாகன சாவிகள் கொடுப்பதை போல அதை சாமி பாதத்தில் வைத்து கொடுத்தோம். அதற்குள் அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பி விட்டுள்ளனர். மற்றபடி சாமியோடு முதல்-அமைச்சர் படத்தை வைத்து பூஜை செய்யவில்லை' என்றனர்.