தமிழக செய்திகள்

இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பாளர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு - இன்று நடைபெறுகிறது

தமிழகம் முழுவதும் உள்ள 200-க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

சென்னை,

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள 3,359 பணியிடங்களை நிரப்பும் வகையில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுகிறது.

இந்த தேர்வை எழுதுவதற்காக 2 லட்சத்து 84 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள 200-க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12.40 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. இன்று நடைபெறும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், உடற்தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT