சேலம்,
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நிலவி வரும் குளுகுளு சீசனை அனுபவிக்க ஆண்டு தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும். இதையடுத்து சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கோடை விழா மலர் கண்காட்சி நடைபெறும்.
அதன்படி ஏற்காட்டில் 49-வது மலர் கண்காட்சி 22-ம் தேதி முதல் தொடங்கிறது. இந்த கண்காட்சி தொடர்ந்து வருகிற 28-ந் தேதி வரை 7 நாட்கள் இந்த மலர் கண்காட்சி நடைபெறுகிறது.
இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஏற்காட்டிற்கு வந்த வண்ணமாக உள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வருவார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் அண்ணா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தும் வகையில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.