தமிழக செய்திகள்

விளைச்சல் அதிகரிப்பு... கடும் வீழ்ச்சியில் தக்காளி விலை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையிலும் தக்காளி விலை மிகவும் குறைந்துள்ளது.

நெல்லை,

நெல்லை டவுன் நயினார்குளம் காய்கறி மொத்த விற்பனை மார்க்கெட் டில் நெல்லை, தென்காசி பகுதிகளிலும் இருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.28 முதல் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளியின் விலை குறைந்து விற்பனை செய்யப்படு கிறது. வரத்து அதிகரிப்பு காரணமாக தக்காளி விலை மேலும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேபோல் பல்லரி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. பல்லாரி கடந்த வாரம் 3½ கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று மேலும் விலை குறைந்து 1 கிலோ ரூ.25 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த தரத்தில் உள்ள பல்லாரி கிலோ ரூ.18 முதல் ரூ.20 வரை விற்பனையாகிறது. சின்ன வெங் காயம் கிலோ ரூ.40 வரை விற்பனையாகிறது.

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையிலும் தக்காளி விலை மிகவும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.