செங்கல்பட்டு,
மத்திய தொல்லியல்துறை சார்பில் ஆண்டுதோறும் நவம்பர் 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், ஓவிய போட்டிகள், லேசர் ஒளி என பல்வேறு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் உள்ள புராதன சின்னங்கள் இருக்கும் பாரம்பரிய நகரங்களில் நடைபெறும்.
இந்த நிலையில் மாமல்லபுரத்தில் நாளை காலை அர்ச்சுனன் தபசு எதிரே ஓவிய போட்டியுடன் "உலக பாரம்பரிய வாரம்" தொடங்குகிறது. இதையொட்டி நாளை ஒருநாள் மட்டும் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களாக கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைக்கல் பாறை, புலிக்குகை, மற்றும் குடவரை கோவில் பகுதிகளை உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என அனைவரும் இலவசமாக சுற்றி பார்க்கலாம் என்று தொல்லியல்துறை அறிவித்து உள்ளது.