தமிழக செய்திகள்

பிளஸ்-2 மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீன்பிடி தொழிலாளி ஒருவர், பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, ஆபாச காட்சிகளை பதிவு செய்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பிளஸ்-2 மாணவியை மிரட்டி பலாத்காரம்

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே ராமன்துறையை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி ஆரோக்கிய டிக்சன் (வயது 27), பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, ஆபாச காட்சிகளை பதிவு செய்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

வாலிபர் போக்சோவில் கைது

மேலும், மாணவியின் ஆபாச புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கிய டிக்சனை கைது செய்தனர்.