தமிழக செய்திகள்

திருட்டுத்தனமாக மது விற்ற வாலிபர் கைது

சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள கோகுலாபுரம் டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது டாஸ்மாக் கடை அருகே காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்த கலீல் (வயது 32) திருட்டுத்தனமாக மது விற்பது தெரியவந்தது. இதனையடுத்து கலீலை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT