ஹரிகரன்  
தமிழக செய்திகள்

சேலத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

ஹரிகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் தொல்லை

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அந்த சிறுமிக்கு ஹரிகரன் (வயது 28) என்ற வாலிபர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.

வாலிபர் கைது

சிறுமிக்கு பாலியல் ரீதியான அத்துமீறல் மற்றும் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஹரிகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT