தமிழக செய்திகள்

கோவில் திருவிழாவில் மின்விளக்கு அமைத்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி!

அய்யனார் கோவில் திருவிழாவிற்காக மின்விளக்குகள் அமைக்கும் பணியில் திவாகர் ஈடுபட்டிருந்தார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா வெள்ளூர் கீழத்தெருவைச் சேர்ந்த திவாகர் (19), மெய்யனூத்துப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற அய்யனார் கோவில் திருவிழாவிற்காக மின்விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அவருடன் ஞானபிரகாசம் என்பவரும் மைக் செட் அமைக்கும் பணியில் இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இருவரையும் மின்சாரம் தாக்கியது.

இதில் படுகாயம் அடைந்த திவாகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஞானபிரகாசம் கடுமையாக காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து சாப்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.