தஞ்சை
தன் மனைவி வீட்டில் இன்னொரு நபருடன் இருந்ததைக் கையும் களவுமாகப் பிடித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட கணவன் தான் இப்போது பேசும் பொருளாகி உள்ளது.
சினிமாவில் ரசித்தது போல் நிஜத்தில் நடந்தால் மக்கள் ரசிக்க மாட்டார்கள் அப்படித்தான் தஞ்சாவூர் அருகே நடந்த கள்ளக்காதல் விவகாரம் வீடியோவாக வைரலாகி எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தாலும் அதை பலரும் வேதனையுடன் பார்க்கிறார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மயில் பாளையம் பகுதியில் வசித்து வருபவர்கள் தர்மராஜ் (வயது 40) அட்சயா (வயது 35) தம்பதியினர். இவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
அட்சயாவிற்கு வேறு நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் - மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினமும் மீண்டும் கணவனுக்கும் - மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் தாங்காமல் தர்மராஜ் மனைவியை முகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு குழந்தையுடன் தலைமறைவாகிவிட்டார்.
முன்னதாக, தன் மனைவி வீட்டில் கள்ளக்காதலன் இருப்பதை கையும் களவுமாகப் பிடிப்பட்டதை வீடியோ எடுத்து வெளியிட்டார் தர்மராஜ்.. அந்த வீடியோவில் மனைவியிடம், "இது என்ன டிரஸ்ஸு? ஸ்லீவ்லெஸ் மாடர்ன் உடையா? அவனை வெளியே வர சொல்லு. உள்ளே யாரு, வெளியே வர சொல்லு, என் மனைவியுடன் வீட்டில் ராத்ரியில் தங்குவதற்கு நீ யாருடா? என்று கொந்தளித்து கதறியிருந்தார்.
என்ன பதில் சொல்ல முடியும் அசடு வழிந்தபடியே அந்த வாலிபர் வெளியே வந்ததும் தனது ஆத்திரம் தீர ஒன்றிரண்டு அறை விட்டாட் அதை வாங்கிக்கொண்டு அலறவும் வழி இல்லாமல் தப்பித்தால் போதுமென்ற்று அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
மற்றொரு வீடியோவில், தன் மகனை முன்னால் நிறுத்தி, தர்மராஜா செல்லம் அப்பா செத்து போயிட்டா பொழைச்சுக்குவியா..என்றதும் அந்த குழந்தை எதுவும் சொல்ல தெரியாமல் ம் என்று மட்டும் சொல்கிறது. நான் இல்லாட்டி என்ன செய்வ? அழுவேன் என்றது, அழக்கூடாது அப்பாஅ மேலே இருப்பேன். உனக்கு ஆசிர்வாதம் செய்வேன் என்றதும் அப்பா என்ன சொல்கிறார் என்று எதுவும் புரியாமல் அந்த குழந்தை கேட்டுக்கொண்டு இருக்கிறது. இந்த காட்சியை வீடியோவில் பார்த்தவர்களின் இதயத்தை உருக்கியது.
இன்னொரு வீடியோவில், காவல்துறை அதிகாரிகளுக்கு வணக்கம். ஐயா என் குடும்பம் என் மனைவியின் கெட்ட சகவாசத்தால் அழிந்துவிட்டது. நன்றாக இருந்த என் குடும்பம் நாசமாகிவிட்டது இதற்கு காரணம் தென்னூர் சங்கீதபுரத்தை சேர்த ஜோஸ் தான் அவன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். அவனோடு என் மனைவிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. அந்த பழக்கத்தை விட்டுவிடு என்று பலமுறை கெஞ்சினேன் அவர் விடவில்லையே.
என் குடும்பம் இப்போது அழிந்துவிட்டது, தயவுசெய்து ஜோசுக்கு ஏதாவது தண்டனை வாங்கி கொடுங்க. இல்லாட்டி இன்னொரு குடும்பம் நாசமா போயிடும் என்று அழுதபடியே வீடியோவில் பேசியிருந்தார். மேற்கண்ட வீடியோக்கள் அனைத்துமே பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்த நடவடிக்கையில் போலீசார் உடனடியாக இறங்கினார்கள்.
அப்போதுதான், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கழுத்து, கன்னத்தில் அறுபட்ட நிலையில் தர்மராஜ் மனைவி அட்சயா சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது. என் கணவன் போதையில் கத்தியால் கிழித்துவிட்டான்" என்று அட்சயா சொல்லவும், அங்கு வந்த போலீசார் அடையாளம் கண்டு வீடியோவில் உள்ள பெண் இவர் தான் என்பதை உறுதி செய்தனர். உடனடியாக குழந்தையுடன் தலைமறைவான தர்மராஜை தேடத் தொடங்கினார்கள். நேற்று மதியம் தஞ்சாவூர் அருகே வல்லத்தில் குழந்தை இருப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் குழந்தையை மீட்டு தஞ்சாவூர் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதேபோல தர்மராஜையும் தனிப்படை போலீசார் மீட்டு, பட்டுக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பிறகு தர்மராஜிடம் முதல்கட்டமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. அதில் சில பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. கறம்பக்குடி அருகே உள்ள நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் டிரைவராக உள்ளாராம். 25 வயது அட்சயாவை திருமணம் செய்து திருச்சியில் வாடகை வீட்டில் குடியிருந்துள்ளார். தர்மராஜ் வீட்டில் இல்லாதபோது இன்ஸ்டாகிரராமில் நிறைய நேரம் செலவிட்டு லைக்குகளை வாங்குவதற்காக காதல் பாடல்களைகளை அட்சயா பதிவிட்டு வருவாராம். அப்போதுதான் ஜோஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. அடிக்கடி அட்சயா வீட்டிற்கும் ஜோஸ் வந்து சென்றுள்ளார். தாலியை கழற்றி வைத்து வீட்டில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பது வழக்கமாக கொண்டுள்ளார் அட்சயா. இது தெரிந்து மனைவியைக் கண்டித்தும் அட்சயா திருந்தவில்லையாம். ஒருமுறை ஜோஸ், தன் மனைவியோடு வீட்டுக்குள் இருக்கும்போது கையும் களவுமாக பிடித்துள்ளார் தர்மராஜ்.
இந்த கோபத்தில் 1 ஒரு வருடமாக தம்பதி இருவரும் பிரிந்து இருந்தார்களாம்.. கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் பட்டுக்கோட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். வீடு மாறினாலும் அட்சயாவின் குணம் மாறவில்லை. அங்கும் அவ்வபோது ஜோசை வரவழைத்து உல்லாசமாக ஈடுபட்டு வந்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள தவறான சாட்டிங் நிறைய குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தி கொண்டிரக்கிறது என்பது நிதர்சனம். எல்லாம் அளவோடு இருந்தால் நல்லது.