தேனி,
தேனி மாவட்டத்தில் தலையில் முடி கொட்டியதால் இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள உப்பார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. அவருடைய மகள் அஞ்சலி (வயது 19). இவர் கடந்த ஒரு மாதமாக புழுவெட்டு நோயால் பாதிக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு முடிகள் அனைத்தும் கொட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அஞ்சலி நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.