தமிழக செய்திகள்

“பிக்பாஸ்” முத்துக்குமரன் மீது கமிஷனர் அலுவலகத்தில் இளம்பெண் புகார்

‘பிக்பாஸ்’ பிரபலம் முத்துக்குமரன் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிவிட்டதாக இளம் பெண் ஒருவர் குற்றம் சாட்டி ஆடியோக்களை வெளியிட்டிருந்தார்.

பிக்பாஸ் முத்துக்குமரன் திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிவிட்டதாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இளம்பெண் புகார் மனு அளித்தார். அதில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்துள்ளார்.

முத்துக்குமரன் மீது புகார்

'பிக்பாஸ்' முத்துக்குமரன் திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து தன்னை ஏமாற்றி விட்டதாக இளம்பெண் 'யூ-டியூபர்' பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் தற்கொலைக்கு முயன்றார்.

அதனைத் தொடர்ந்து தன்மீது களங்கம் ஏற்படுத்துவதாக கூறி சம்பந்தப்பட்ட இளம்பெண் மீது முத்துக்குமரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இதற்கிடையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று வந்த அந்த இளம் பெண் திருமணம் செய்து கொள்வதாக தன்னிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு முத்துக்குமரன் ஏமாற்றி விட்டதாக புகார் மனு ஒன்றை அளித்தார்.

புகார் அளித்த பின்னர் அந்த இளம்பெண் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்ஸ்டாகிராம் மூலமாக எனக்கு பழக்கமான முத்துக்குமரன், ஒரு கட்டத்தில் என்னை அவர் வீட்டுக்கு அழைத்து, மதுவை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசம் அனுபவித்தார்.

தாலி கட்ட வேண்டும்

அதன் பின்னர் என்னை அவர் ஏமாற்றத் தொடங்கினார். திருமணம் செய்து கொள்ள தயாராக இல்லை என்று சொல்லி என்னிடம் பேசுவதை நிறுத்தினார். இதனால் நான் கடுமையான மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றேன். எந்த வாக்குறுதி கொடுத்து என்னுடன் உடல் ரீதியாக பழகினாரோ, அந்த வாக்குறுதியின்படி எனக்கு அவர் தாலி கட்டவேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT