சென்னை,
சென்னை சூளை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் துணை கமிஷனரிடம் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார். அந்த பரபரப்பு புகாரில் அவர் கூறியதாவது:-
நான் ஒரு தனியார் நிறுவனத்தில் 2024 மார்ச் முதல் 2025 வரை ஜூலை வரை பணிபுரிந்து வந்தேன்.அப்போது தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்த வாலிபருடன் இன்ஸ்டா மூலம் அறிமுகம் ஏற்பட்டது.
அவர் பகுதி நேர இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். துரைப்பாக்கத்தில் வசித்து வருகிறார். அவர் முதலில் தனது குறும்படத்துக்கு ஆதரவு கேட்டு லிங்க் அனுப்பினார். பின்னர் தனது நண்பருக்கு வேலை தேவைப்படுவதாக கூறி என்னிடம் உதவி கேட்டார். அதன் மூலம் அவரும் நானும் நண்பர்களாக பழகி வந்தோம். என்னை நேரில் சந்திக்க வேண்டும் என்று பலமுறை கேட்டார்.
ஆரம்பத்தில் எனக்கு விருப்பமில்லாததல் நான் தவிர்த்து வந்தேன். அவர் தொடர்ந்து அக்கறை, அன்புக் காட்டி என்னை உண்மையாக காதலிப்பதாக கூறினார். எனக்கு தாயார் இல்லை. அவருக்கும் அப்பா இல்லை என்று கூறி என்னை கைவிட மாட்டேன், திருமணம் செய்து கொள்வேன் என் குடும்பத்தினரிடம் பேசிவிட்டேன் என்று நம்பிக்கை அளித்தார்.
தனது வீட்டு முகவரி, தாயாரின் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களையும் கொடுத்து என்னை முழுமையாக நம்பவைத்தார். குடும்ப சூழ்நிலைகாரணமாக திருமணத்திற்கு 2 வருடங்கள் ஆகும் அதுவரை பதிவு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்.
பதிவு திருமணம் பற்றி பேச வேண்டும் என்று தனது நண்பரின் ஓட்டலுக்கு கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வர சொன்னார். அங்கு சென்ற பிறகு தண்ணீர் குடிக்க கொடுத்தார். தண்ணீர் குடித்த பின்னர் எனக்கு மிகவும் மயக்கமாகவும் சோர்வாகவும் இருந்தது. ஏதோ விபரீதம் நடக்கபோகிறது என்பதை உணர்ந்த நான் என்னுடைய செல்போனை எடுத்து எனது தந்தைக்கு தகவல் கூற முயன்றேன். அப்போது என்னுடைய செல்போன் பிடுங்கி வைத்துக்கொண்டார்.
ஏன் என் மீது நம்பிக்கை இல்லையா? நான் உன்னை ஏமாற்றி விடுவேன் என்று பயப்படுகிறாயா என்று பேசிக்கொண்டே என்னை பலவந்தமாக கட்டி அணைத்தார். நான் அவரை தள்ளியபோதும் மீண்டும் கட்டிலில் தள்ளி அணைத்தார். என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தேன். மயக்கம் கண்ணை சொருகியது. அந்தநிலையில் என்னால் அவரை எதுவும் செய்ய முடியவில்லை.
வலுக்கட்டாயமாக என்னுடைய விருப்பம் இல்லாமல் உடலுறவு வைத்துக்கொண்டார். வெகுநேரம் ஆன பிறகு மயக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டு அழுது கொண்டு இருந்தேன். ஏன் அழுகிறாய்? நான் உன்னை திருமணம் செய்து கொள்ளபோகிறேன் என்னை நம்பவில்லையா? என்று கூறினார்.
அன்று இரவே என்னுடைய செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி எந்த காரணமும் இல்லாமல் என்னுடன் சண்டை போட்டார். அவர் அனுப்பிய குறுஞ்செய்தியில் நீ ஓட்டலில் நடந்து கொண்ட விதம் தவறு என்று கூறி இருந்தார். அதை பார்த்தவுடன் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
உடனே அவரை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டபோது உன்னுடைய எண்ணை பிளாக் செய்துவிடுவேன் என்று கூறி ஒருவாரம் பேசாமல் இருந்தார். நான் தொடர்ந்து செல்போன் மூலமாகவும் குறுஞ்செய்தி மூலமாகவும் அவரிடம் தொடர்பு கொண்டேன்.
பின்னர் வாட்ஸ் - அப் இன்ஸ்டா மற்றும் செல்போன் உள்ளிட்ட அனைத்திலும் என்னை பிளாக் செய்தார். இதையடுத்து நான் அவரது அண்ணனுக்கு தகவல் தெரிவித்தேன். இதையறிந்த எனது காதலன் என்னை தொடர்பு கொண்டு மிகவும் அவதூறாக பேசினார். என் அண்ணுக்கு எப்படி தகவல் அனுப்பலாம். நீ தான் என்னை வலுக்கட்டாயக இறுக்கி பிடித்து உடலுறவு வைத்துக்கொள்ள வற்புறுத்தினாய் என்று இழிவாக பேசினார்.
போலீசில் புகார் அளித்தால் அது உனக்கே பாதிப்பாகும் எனது உறவினர்கள் காவல் துறையில் உயர் பொறுப்பில் உள்ளனர் என்று கூறி என்னை மிரட்டினார். என்னிடம் அவசர தேவைக்காக ரூ.5 ஆயிரம் வாங்கி இருந்தார். அதில் ரூ.2 ஆயிரம் ஜி பே மூலமும், ரூ.3 ஆயிரம் ரொக்கமாகவும் பெற்றிருந்தார். அந்த பணத்தையும் திருப்பி தரவில்லை. அவர் கொடுத்த முகவரி உண்மையா என்பதை தெரிந்துகொள்ள அவரது நண்பரின் ஓட்டலுக்கு சென்றபோது, அவர் அங்கு ஒரே ஒரு நாள் மடுமே அறை எடுத்திருந்ததாக தெரிவித்தனர்.
அதன்பிறகு அவரது வீட்டிற்கு சென்று அவரது தாயாரிடமும் பேசினேன். அப்போது அவரது தாயார் ஏற்கனவே உறவினர் பெண்ணுடன் திருமணம் பேசிவிட்டதாகவும் அந்த வாக்குறுதியை மீறி உனக்கு என்னுடைய மகனை திருமணம் செய்து வைக்க முடியாது என்று கூறினார்.
நான் அவரது தாயாரிடம் உங்கள் மகன் என்னை ஏமாற்றியதால் நான் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொள்ளபோகிறேன் என்று கூறிவிட்டு அழுது கொண்டே வீட்டிற்கு வந்தேன். அன்று இரவே என் காதலின் தாயார் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு மறுநாள் திருவான்மியூரில் உள்ள கோவிலுக்கு வா நேரில் பேசிக்கொள்ளலாம் அதுவரை எந்த தவறான முடிவும் எடுத்த் உவிடாதே என்று சமாதானம் செய்து வைத்து பேசினார்.
நீ மட்டும் தனியாக வா, யாரையும் அழைத்து வராதே நல்ல முடிவாக எடுக்கலாம் என்று வர சொன்னார். அடுத்த நாள் எனது காதலன் அவரது தாயார் அவரது அண்ணன் மற்றும் உறவினர்கள் சேர்ந்து என்னை குற்றவாளி போல கேள்வி கேட்டு என்னை தவறான பெண் என்று கூறி அவமானப்படுத்தினர். வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறினர்.
இந்த சம்பவங்களால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். வேலைக்கு செல்ல முடியாமல் அழுத்துகொண்டே இருந்தேன். எனக்காக பேச வந்த நண்பர்களிடமும் என் மகன் திருமணம் செய்தாலும் உடனே விவாகரத்து செய்து விடுவான் என்று கூறி மிரட்டினர். ஒரு கட்டத்தில் என்னால் தாங்க முடியாமல் அவரது வீட்டிற்கு மீண்டும் சென்றபோது அவரது தாயார் என்னை அவமானப்படுத்தி வீட்டில் இருந்து இழுத்து வெளியே தள்ளினார்.
பின்னர் என் நண்பர் அவரது மனைவியை அழைத்து இனி என் காதலுனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் என் உயிருக்கு ஏதாவது நடந்தாலும் காதலன் குடும்பத்துக்கு பொறுப்பு இல்லை என்று என்னை மிரட்டி கைப்பட எழுத வைத்து கையொப்ப மிட்டு கடிதத்தை பெற்றுக்கொண்டனர்.
அதன் பிறகும் என் காதலன், தாயார் இல்லாத நேரங்களில் என்னையும் என் தம்பியையும் தொடர்பு கொண்டு நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன் நீ என் தாயார், என் உறவினர்கள் என் அண்ணன் பேசியது பற்றி கவலைப்படாதே, பெற்றோர்கள், உறவினர்கள் அப்படிதான் பேசுவார்கள் என்று பேசினார்.
அவர் தாயார் இருக்கும் போதெல்லாம் மாறுபட்டு பேசுகிறார். அவரது பேச்சில் நம்பிக்கை இல்லாததால் என் தந்தை, என் தம்பியை வைத்து பேச முயன்றபோதெல்லாம் தவிர்த்து வந்தனர். பின்னர் அவர்கள் வசித்து வந்த வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டனர்.
இறுதியாக அவர்களிடம் பேச முயன்றபோது என் காதலன் என்னிடம் மிகவும் இழிவாக மற்றும் அவதூறான வார்த்தைகளில் பேசினார்.
நானும் என் காதலனும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், ஓட்டலில் நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்த நிர்வாண வீடியோக்கள் இருப்பதாகவும், அவற்றை வெளியிட்டு என்னை அவமானபடுத்தபோவதாகவும் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.
என்னை கட்டாயப்படுத்தி எழுத வைத்த கடிதம் மற்றும் பிற பதிவுகள் இருப்பதால் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறி அச்சுறுத்துகின்றனர்.
என்னை காதலித்து ஏமாற்றி, பலவந்தமாக கற்பழித்து, என்னிடம் சட்டத்திற்கு விரோதமாக நடந்து கொண்ட காதலன் மீதும், அவரது தயார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை போன்று இந்த சமுதாயத்தில் எந்த பெண்ணும் இனி ஏமாறக்கூடாது. எனவே சட்டப்படியான நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.