களக்காடு,
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள செண்பகராமநல்லூரை சேர்ந்தவர் சிவன்(வயது 60). விவசாயி. இவரது மனைவி வைரம்மாள் (54). இவர்களுக்கு அமுதா (22) உள்பட 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில், அமுதா வீட்டில் இருந்து வந்தார். அமுதாவிற்கும், அவரது உறவினரான - திருமணமான வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
'இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இது பற்றி தெரிய வந்ததும்' அமுதாவின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். மேலும் தகாத உறவை கைவிடும் படி கூறி வந்துள்ளனர். ஆனால் அமுதா அதற்கு மறுத்து தொடர்ந்து அந்த வாலிபருடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெற்றோருக்கும், - அமுதா விற்கும் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.
ஒருகட்டத்தில் அமுதா வின் கள்ளக்காதல் விவகாரம் அந்த ஊரில் அரசல் புரசலாக பரவியது. இதனால் சிவனும், வைரம்மாளும் தங்களது மகளின் நடவடிக்கையால் மிகுந்த வேதனையும், அடைந்துள்ளனர். தொடர்ந்து அமுதாவிடம் சண்டையிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை அமுதா தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்தனர். இதுபற்றி மூலைக்கரைப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அமுதாவின் கைப்பற்றி உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது அமுதா தகாத உறவினால் அவரது பெற்றோரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஊர் மக்கள் தெரிவித்தனர். இதனால் போலீசார் அந்த கோணத்தில் விசாரணை நடத்தினர்.
அப்போது உடலில் அமுதாவின் காயங்கள் இருந்ததை கண்ட போலீசார் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். இதனிடையே நேற்று மாலையில் பிரேத பரிசோதனை முடிவில் அவர் விஷம் கொடுத்தும், கழுத்தை இறுக்கியும் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது.
இதையடுத்து சிவன்-வைரம்மாள் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் 2 பேரும் சேர்ந்து அமுதாவுக்கு நேற்று முன்தினம் இரவு வாயில் விஷத்தை ஊற்றி உள்ளனர். ஆனால் அதில் அவர் உயிரிழக்கவில்லை. இதனால் அவரது பெற்றோர் அதாவை கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரிய வந்தது.
பின்னர் போலீசாரிடம் இருந்து தப்பிக்கவும், ஊர் மக்களை நம்ப வைப்பதற்காகவும் அமுதா தற்கொலை செய்து கொண்டது போல் அறையில் கட்டி தொங்க விட்டுள்ளனர். ஆனால் போலீசார் விசாரணையில் அவர்கள் தற்கொலை நாடக மாடியது அம்பலமானது. இதனை தொடர்ந்து போலீசார் சிவன் மற்றும் அவரது மனைவி வைரம்மாளை கைது செய்தனர்.