திருப்பூர்,
திருப்பூர் ஆத்துப்பாளையத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் திருமணம் முடிந்து தனது கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்தார். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் திருப்பூர் வந்தார். பின்னர் அந்த பெண் தனக்கு தெரிந்த நபரான திருப்பூர் பெரியார் காலனியை சேர்ந்த சக்திகுமாரிடம் (வயது 25) வேலை கேட்டார். இதையடுத்து சம்பவத்தன்று அந்த பெண்ணை வேலை வாங்கித்தருவதாக அழைத்துக்கொண்டு சக்திகுமார், பி.என்.ரோட்டில் உள்ள தனது நண்பர் அறைக்கு சென்றார்.
இதையடுத்து அந்த பெண்ணை, சக்திகுமார் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த பெண் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நிட்டிங் நிறுவன தொழிலாளியான சக்திகுமாரை கைது செய்தனர். வேலை வாங்கிக்கொடுப்பதாக ஏமாற்றி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.