கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

டெலிவரி செய்ய வந்த இடத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது

அவர் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அவர், குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.

சென்னை

சென்னை அமைந்தகரையை சேர்ந்த இளம்பெண் (வயது 30) ஆன்லைனில் பொருள் ஒன்றை ஆர்டர் செய்திருந்தார். அந்த பொருளை டெலிவரி செய்ய வந்த நிறுவனத்தின் ஊழியர், இளம்பெண்ணிடம் பார்சலை கொடுத்துள்ளார். அப்போது அவர் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அவர், குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.

வழக்குப்பதிவு

அந்த பெண் தண்ணீர் எடுக்க வீட்டுக்குள் சென்றபோது, அந்த நபரும் அவரை பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கூச்சலிட்டுள்ளார். இதனால் பயந்து போன அவர் தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து அயனாவரம் பகுதியை சேர்ந்த லோகேஷ் (வயது 22) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.