தமிழக செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

திடீரென வீட்டிற்குள் புகுந்த இளைஞர், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

கோவை,

கோவை மாவட்டம் காரமடை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனியாக வீட்டில் இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் திடீரென வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கூச்சல் போட்டார். உடனே அந்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

இதுகுறித்து அந்த இளம்பெண், காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர் சிறுமுகையை சேர்ந்த சரத்(வயது 26) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.