ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் உலக பிரசித்தி பெற்ற ராமேசுவரம் கோவிலில் உள்ள 3-ம் பிரகாரத்தில் 2 பெண்கள் நடனம் ஆடியபடி செல்போனில் ரீல்ஸ் எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ததாக தெரிகிறது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவிலுக்குள் ரீல்ஸ் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட் டுள்ள நிலையில் அதையும் மீறி 2 இளம்பெண்கள் 3-ம் பிர காரத்தில் ரீல்ஸ் எடுத்து வீடியோ பதிவு செய்ததற்கு பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், ரீல்ஸ் எடுத்த இளம்பெண்கள் மீது கோவில் நிர்வாகம் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.