தமிழக செய்திகள்

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

சுத்தமல்லி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி மற்றும் திருட்டு வழக்கில் ஈடுபட்ட மானூர், அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு கொலை முயற்சி, அடிதடி மற்றும் திருட்டு வழக்கில் ஈடுபட்ட மானூர், அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த இசக்கிராஜா (வயது 30) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.

மேற்சொன்ன வாலிபர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 3 மாதங்கள் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு சேரன்மகாதேவி குற்றவியல் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இசக்கிராஜாவை சுத்தமல்லி காவல்துறையினர் தேடிவந்த நிலையில் நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

SCROLL FOR NEXT