தமிழக செய்திகள்

நகை வியாபாரியிடம் ரூ.13 லட்சம் மோசடி: வாலிபர் கைது

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், செங்கல்பட்டு மாவட்டத்தை சேரந்த நகை வியாபாரியிடம் ரூ.13 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு, அடகு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு தலைமறைவானார்.

சென்னை,

சென்னையில் நகை வியாபாரியிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நகை வியாபாரி

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூவலசந்திரன். பழைய நகைகளை வாங்கி விற்கும் வியாபாரியான இவர், அடகு வைத்த தங்க நகைகளை மீட்டுத் தரும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவன விளம்பரத்தை பார்த்து சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த லோகேஷ் (வயது 40) அவரை தொடர்பு கொண்டார்.

ரூ.13 லட்சத்துடன் வாலிபர் தலைமறைவு

முதலில் 56 கிராம் தங்க நகைகளை மீட்டுத் தந்த பூவலசந்திரனிடம், மேலும் 100 கிராம் நகைகளை மீட்டுத் தருமாறு லோகேஷ் கூறினார். இதை நம்பி ஐ.சி.எப். பகுதிக்கு சென்ற பூவலசந்திரனிடம், காரில் இருந்தபடி ரூ.13 லட்சத்தை லோகேஷ் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் ராஜமங்கலம் அருகே காரை நிறுத்தச் சொல்லி, அடகு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற லோகேஷ், மீண்டும் திரும்பாமல் தலைமறைவானார்.

ரூ.13 லட்சம் பறிமுதல்; வாலிபர் கைது

இதுகுறித்த புகாரின் பேரில் ஐ.சி.எப். போலீசார் லோகேசை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் போலி நகைக்கடை ரசீதை காட்டி பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ.13 லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார், லோகேசை சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT