தமிழக செய்திகள்

நெல்லையில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது

நெல்லை டவுண் பகுதியில் ஒருவருடைய கட்டிடத்தின் மேல் மாடியில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

திருநெல்வேலி மாநகரம் டவுண் மாதா பூங்கொடி தெருவை சேர்ந்த ராமர் மகன் மாரியப்பன் (வயது 19) என்பவர் புகழேந்தி தெருவில் கோமதிநாயகம் என்பவரின் கட்டிடத்தின் மேல் மாடியில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின்படி டவுண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 220 கிராம் எடையுடைய கஞ்சா செடியை கைப்பற்றினர்.

மேலும் இதுெதாடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மாரியப்பனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT