சென்னை,
சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இம்ரான் (வயது 30). சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் இவர் வேலை செய்கிறார். இந்நிலையில், திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 19 வயது பள்ளி மாணவியை தனது மோட்டார் சைக்கிளில் இம்ரான் கடத்தி சென்றுள்ளார்.
பின்னர் மெரினா கடற்கரையில் வைத்து பள்ளி மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இம்ரான் மீது திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், இம்ரானை நேற்று அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.