தூத்துக்குடி,
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஷ்புரம் அருகே போலீசார் ரோந்து பணி மேற்கொண்டர். அப்போது அங்கே சந்தேகப்படும்படிநின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
அதில் அந்த வாலிபர் சட்ட விரோதமாக விற்பனை செய்ய கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த வாலிபர் தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை(எ) கண்ணன் (வயது 25) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து வடபாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் நீலகண்டன் வழக்குப்பதிந்து, சின்னத்துரை(எ) கண்ணனை கைது செய்து, அவரிடமிருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.