தமிழக செய்திகள்

பணகுடியில் காப்பர் வயர் திருடிய வாலிபர் கைது

பணகுடி பகுதியில் கேசவனேரியை சேர்ந்த ஒருவர் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் காப்பர் வயர் திருடு போனதாக பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி பகுதியில், கடந்த 30.5.2026 அன்று, கேசவனேரியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 41) தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் காப்பர் வயர் திருடு போனதாக பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோபியா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் வடலிவிளையைச் சேர்ந்த ஆல்வின்(27) என்பவர் காப்பர் வயரை திருடி சென்றது தெரியவந்தது.

வாலிபர் கைது:

இதனைத் தொடர்ந்து மேற்னெசான்ன சப்-இன்ஸ்பெக்டர் நேற்று ஆல்வினை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.