தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் எல்லைமாரியம்மன் கோவில் வீதியில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மரக்காணம் ஆலத்தூர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த திலீப் என்ற ஆனந்த் (வயது 30) என்பதும், மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியிருப்பதும் தெரியவந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.