தமிழக செய்திகள்

நர்சுகள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது

சென்னை கொளத்தூர் பகுதியில் நர்சுகள் தங்கியுள்ள வீட்டில், குளியல் அறையில் அவர்கள் குளிக்கும் போது, மர்ம நபர் மறைந்து இருந்து செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார்.

சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் நர்சுகள் 11 பேர், அங்குள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர்.

அவர்கள் வீட்டில் உள்ள குளியல் அறையில் குளிக்கும் போது, மர்ம நபர் மறைந்து இருந்து செல்போனில் அதனை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நர்சுகள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த மர்ம நபரை மடக்கி பிடித்து பெரவள்ளூர் போலீசில் ஒப்படைத்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், அவர் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான சத்யராஜ் (வயது 37) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.