தமிழக செய்திகள்

ஆந்திர வாலிபர் கொலை வழக்கில் வாலிபர் கைது

ஆந்திர வாலிபர் கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா அருகே உள்ளது இருங்குளம் காப்பு காடு. இங்கு அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக கடந்த 4-ந்தேதி கும்மிடிப்பூண்டி வனசரகர் சுரேஷ்பாபு பாதிரிவேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அருகே மதுபாட்டில், செருப்பு, கழுத்தில் போடும் உத்திராட்ச மாலை போன்றவை கிடந்தது. போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட வாலிபர் ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை அருகே உள்ள நாகராஜபுரத்தை சேர்ந்த தருண் குமார் (வயது 20) என்பது தெரியவந்தது. வாலிபர் தருண்குமாரை குடிபோதையில் நண்பர்கள் சிலர் சேர்ந்து கடந்த மாதம் 25-ந்தேதி வெட்டிக்கொலை செய்திருப்பது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தின் செல்போன் சிக்னல்களை வைத்து கொலையாளிகள் 5 பேரை போலீசார் தேடிவந்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக செந்தில்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மனேஷ் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு