தமிழக செய்திகள்

கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை மாநகரில் வாலிபர் ஒருவர், கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

திருநெல்வேலி மாவட்டம், கிருஷ்ணாபுரம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் காளிமுத்து (வயது 22) என்பவர் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தார்.

இதனையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் ஆணைப்படி காளிமுத்து இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.