தமிழக செய்திகள்

கொலை வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை மாநகரில் வாலிபர் ஒருவர், கொலை வழக்கில் சம்மந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தார்.

நெல்லை,

திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த செல்லசாமி மகன் சுதாகர் (வயது 26) என்பவர் நெல்லை மாநகர பகுதியில் கொலை வழக்கில் சம்மந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தார்.

இதனையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி நேற்று சுதாகர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.