தமிழக செய்திகள்

கொலை வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையை சேர்ந்த வாலிபர் ஒருவர், கொலை முயற்சி மற்றும் கொலை வழக்கில் சம்மந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தார்.

நெல்லை,

திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை, நம்பிக்கைநகரைச் சேர்ந்த பாண்டி மகன் பிரதாப் (வயது 23) என்பவர் நெல்லை மாநகரப் பகுதியில் கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தார்.

இதனையடுத்து பெருமாள்புரம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெகடரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி நேற்று மேற்சொன்ன வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT