தமிழக செய்திகள்

நெல்லையில் கொலை வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை மாநகரில் வாலிபர் ஒருவர் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்தார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலூகா, முத்தூர், வடக்குத் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் பேச்சிமுத்து (வயது 28) என்பவர், நெல்லை மாநகர பகுதியில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தார்.

இதனையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி நேற்று பேச்சிமுத்து, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT