தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் ஓடும் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள வாழையடி முதல் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 29). தொழிலாளியான இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு நாசரேத் பேருந்து நிலையத்தில் மது போதையில் சுற்றித் திரிந்துள்ளார். பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேருந்தில் பயணித்த 17 வயது சிறுமிக்கு வெங்கடேஷ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி சத்தமிட்டுக் கூச்சலிட்டுள்ளார்.
சிறுமியின் சத்தம் கேட்டு உஷாரான பேருந்து பயணிகள், வெங்கடேஷை மடக்கிப் பிடித்து நாசரேத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி தீவிர விசாரணை நடத்தி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வெங்கடேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.