திருச்சி,
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும், ஒமாந்தூர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 25) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த வாலிபர் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார்.
இது குறித்து அறிந்த சிறுமியின் தாயார் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து சிறுமியின் தாயார் ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்தனர்.