தமிழக செய்திகள்

பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்: வாலிபர் போக்சோவில் கைது

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 17 வயதான பிளஸ்-2 மாணவியுடன் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இருக்கிறார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 17 வயதான பிளஸ்-2 மாணவியுடன் திருவண்ணாமலை மாவட்டம் வேப்பூர்செக்கடியை சேர்ந்த கருப்பன் (வயது 28) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இருக்கிறார்.

பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்:

இந்த நிலையில் ஆசைவார்த்தை கூறி அவர் அந்த மாணவியை சாத்தனூர் அணைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

போக்சோவில் வாலிபர் கைது:

பள்ளி முடிந்து வீட்டுக்கு வர ஏன் தாமதம் என விசாரித்தபோது, நடந்த சம்பவத்தை மாணவி தெரிவித்ததைத் தொடர்ந்து, பெற்றோர் புகார் அளித்தனர். ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கருப்பனை கைது செய்தனர்.