தமிழக செய்திகள்

கொலை முயற்சி வழக்கில் வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

நெல்லை மாநகரில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் வாலிபர் ஒருவர் ஈடுபட்டு வந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், முறப்பநாடைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சண்முகசுந்தரம் (வயது 23) என்பவர் திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

இதனையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி நேற்று சண்முகசுந்தரம் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT