தமிழக செய்திகள்

தென்காசி அருகே அரசு பஸ் மீது பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு

போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த சூரிய மூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சுரண்டை,

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கடையாலுருட்டி அருகே சங்கரன்கோவிலில் இருந்து வந்த அரசு பஸ்சும் எதிரில் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிள் வாகனத்தில் வந்த சாம்பவர் வடகரை மாஞ்சோலை தெருவை சேர்ந்த ஞான பிரகாஷ் என்பவர் மகன் சூரிய மூர்த்தி (வயது29). என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த சுரண்டை போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த சூரிய மூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT