தமிழக செய்திகள்

சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞர் பாலத்தின் மேல் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் ஒன்று, பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞர், பாலத்தின் மேல் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.

இதில் படுகாயமடைந்த அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT