தமிழக செய்திகள்

நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.. மற்றொருவரை தேடும் பணி தீவிரம்

நீரில் மூழ்க தொடங்கிய நிலையில், நண்பர்களின் முயற்சியால் யாமின் பத்திரமாக மீட்கப்பட்டார்.

திருச்சி,

நண்பர்களுடன் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நீரில் மூழ்கி பலி

திருச்சி கனியூர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் 10 பேர் விடுமுறை நாளான நேற்று காவிரியாற்றின் முக்கொம்பு அணை பகுதிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அவர்களில் பார்த்தசாரதி, ஹரி கோகுல், யாமின் ஆகிய மூவரும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.

திடீரென மூவரும் நீரில் மூழ்க தொடங்கினர். இதில் யாமினை அவரது மற்ற நண்பர்கள் இணைந்து காப்பாற்றினர். பார்த்த சாரதி சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், மாயமான ஹரி கோகுலை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT