ஆந்திர பெண் கொலை 
தமிழக செய்திகள்

அதிக ஆர்வம் கொண்ட அருணா.. ஒரு கட்டத்தில் முடியல...ஆந்திர பெண் கொலையில் வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

செக்சில் அதிக ஆர்வம் கொண்ட அருணா அடிக்கடி என்னை தனிமையில் இருக்க அழைப்பார் என பாரதிராஜா கூறியுள்ளார்.

சென்னை,

ஆந்திரமாநிலம், நகரி அருகே உள்ள நின்றை சவரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அருணா (வயது 48). இவரது கணவர் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன், மகள் பெங்களூரில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.

கொடூர கொலை

அருணா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாமரைப் பாக்கம் அடுத்த வதட்டூர் கிராமத்தில் நடைபெற்ற உறவினர் திருமணத்தில் பங்கேற்க வந்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பெரியபாளயைம் அருகே உள்ள தொட்டா ரெட்டி குப்பம் வெள்ளக்குளம், வயல் வெளியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது முகம் ஆசிட் ஊற்றியும், தீயால் எரித்தும் சிதைக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து ஊத்துக் கோட்டைபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கள்ளக் காதல் விவகாரத்தில் அருணா கொலை செய்யப் பட்டு இருப்பது தெரிந்தது.

இது தொடர்பாக தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை அருகே உள்ள வதட்டூர் கிராமத்தைச்சேர்ந்த கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியான பாரதி ராஜா (44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

செக்ஸ் தொல்லை

அவரிடம் நடத்திய விசாரணையில் அருணா அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுத்து அழைத்ததால் தீர்த்து கட்டியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். அவர் கூறியதாவது:-

அருணா வதட்டூரில் உள்ள தனது தாய்வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற போது எனக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம்.

அதிக ஆர்வம்

அருணா இயற்கைக்கு மாறாக உல்லாசமாக இருக்க கூறுவார். இது எனக்கு பிடிக்கவில்லை. செக்சில் அதிக ஆர்வம் கொண்ட அருணா அடிக்கடி என்னை தனிமையில் இருக்க அழைப்பார்.

நான் சில நேரங்களில் மறுப்பு தெரிவித்தால் எனக்கு குழந்தைகள் இல்லையே..வரவேண்டியது தானே என்று கூறுவார்.

உல்லாசமாக இருக்கும் போது ரகசியமாக அருணா அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்தும் ரசிப்பார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த போது என்னை தனிமையில் சந்திக்க உடனடியாக புறப்பட்டு வருமாறு செல்போனில் அழைத்தார். நான் மறுப்பு தெரிவித்தபோது அவர் கடுமையாக பேசினார்.

தீர்த்துக்கட்ட முடிவு

அருணாவின் செக்ஸ் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன்.

ஆசிட் ஊற்றினேன். இதையடுத்து அருணா விடம் உல்லாசமாக இருக்க லாம் என்று ஆசை வார்த்தை கூறி அவரை மோட்டார் சைக்கிளில் தொட்டாரெட்டி குப்பம் அழைத்து வந்தேன். பின்னர் அவரை கையால் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொன்றேன்.

அருணா இறந்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் சிக்காமல் இருப்பதற்காக அவர முகத் தில் ஆசிட் ஊற்றினேன். மேலும் கொண்டு வந்து இருந்த மோட்டார் சைக்கிள் ஆயிலை முகத்தில் ஊற்றி தீவைத்தேன்.

ஆனால் தீப்பற்றி எரியாததால் பயந்து போய் அங்கிருந்து தப்பி சென்று விட்டோன். ஆனால் போலீ சார் கைது செய்துவிட்டனர். இவ்வாறு பாரதிராஜா கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

கொலையாளி சிக்கியது எப்படி?

அருணா கொலை செய் யப்பட்ட இடத்தில் அவரது செல்போன் கிடந்தது.அதில் கடைசியாக பேசி நபர்களின் விபரங்களை வைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது பாரதிராஜா விடம் விசாரித்தபோதுதான் அவர்களது கள்ளக்காதல் வெளிச்சத்துக்கு வந்தது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையின்போது அவர் அருணாவை கொலை செய்ததை கொண்டார். ஒப்புக்கைதான பாரதிராஜாவை போலீசார் ஊத்துக் கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.