தமிழக செய்திகள்

மதுரையில் வீட்டில் வைத்து யூடியூபர் மாரிதாஸ் கைது

மாரிதாஸ் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு போலீசார் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மதுரை:

அண்மை காலமாக முதல்-அமைச்சர் விஜய், தவெக அமைச்சர்கள், தவெக எம்எல்ஏக்கள் ஆகியோர் மீது ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோ வெளியிட்டு வந்தவர் மாரிதாஸ். இவர் வலதுசாரி ஆதரவாளர். இவர் ஏஐ மூலம் வீடியோக்களை வெளியிட்டு அவதூறு பரப்புவதாக தவெகவினர் குற்றம்சாட்டி வந்தனர்.

மாரிதாஸ் கைது

இந்த நிலையில் மதுரையில் உள்ள மாரிதாஸின் வீட்டிற்கு 10-க்கும் மேற்பட்ட சென்னை சைபர் கிரைம் போலீசார் சென்று அவரை கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தனது வீட்டிற்கு 10-க்கும் மேற்பட்ட போலீசார் வந்துள்ளதாக மாரிதாஸே தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

SCROLL FOR NEXT